மும்பை: தினமும் எல்லா மால்கள் மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களிலும் 9:30 முதல் வரிசையில் காத்திருந்து ஜியோ சிம் கார்டுகளை வங்கி கொண்டு இருக்கும், வாங்க இருக்கும் மக்கள் முதலில் இதைப் படித்துவிட்டு வாங்குவதா? இல்லையா? என்று முடிவு செய்யுங்கள்.
விளம்பரம் இல்லாத ஒரு பெரிய மார்க்கெட்டிங்
வணிக ரீதியாக 4ஜி சேவையைத் துவங்குவதற்கு முன்பே எல்லோர் கையிலும் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜியோ முயல்வது விளம்பரம் இல்லாத ஒரு பெரிய மார்க்கெட்டிங் உத்தியே.ரிலையன்ஸ் ஆர்காம்
மார்க்கெட்டிங் உத்தி
அப்போது வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமுகவலைத் தளங்கள், ஊடகங்கள் போன்றவற்றின் வளர்ச்சி அதிகம் இல்லாததால் தெரு தெருவாகக் கூவி தனது விற்பனையை செய்த நிறுவனத்தின் மொபைல் ஃபோன்கள் என்ன ஆகின என்பது அனைவருக்கும் தெரியும்.அதே போன்று தான் இதுவும் ஒரு மார்க்கெட்டிங் உத்தியே தவிர வேறு ஏதும் இல்லை.ஏன்?
ஆகஸ்ட் 15 முதல்
90 நாட்களுக்கு இலவசமாக ஜியோ முன்னோட்ட சேவையை அளித்துவிட்டு பின்னர் எப்படியாவது நம்மிடம் இதை வசூலிக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலே தொடங்க இருப்பதாக அறிவிப்பு வந்தது ஆனால் இதுவரை தொடங்கப்படவும் இல்லை.இதைப் பற்றி எல்லாம் விரிவாகப் பார்க்கும் முன்பு தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ எப்போது முழுமையாக வணிக செயல்பாட்டிற்கு வரும் என்பதைப் பார்ப்போம்.வணிகரீதியாக எப்போது?
இப்போது வரும் தகவல்களின் படி செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி இதைப்பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காகப் பங்குதாரர்கள் 2015 டிசம்பர் முதல் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.ஜியோ முன்னோட்ட ஆஃபர் சட்ட திட்டத்திற்குட்பட்டு செயல்படுகிறதா?
ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையுடன் ரிலையன்ஸ் நிறுவனம் இப்படி இலவசமாகச் சேவையை அளிப்பது முறைகேடானது என்று இது குறித்து முறையிட்டுள்ளது.ஸ்பெக்டர்ம் பயன்படுத்துவதற்கான கட்டணம்
அரசுக்கு ஸ்பெக்டர்ம் பயன்படுத்துவதற்கான கட்டணம் செலுத்தாமல், வணிக ரீதியாகத் துவங்கவும் இல்லாமல் பொதுவாக தனது வர்த்தகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.இது போன்ற 90 நாட்கள் இலவச அழைப்பு மற்றும் தரவு சேவையை அளிப்பது மிகப் பெரிய வாடிக்கையாளர் கையகப்படுத்தல் முறையே ஆகும்.குரல் அழைப்புகள்
இது வரை ஜியோ நெட்வொர்க்கினை பயன்படுத்துபவர்களுக்குச் சரியான தெளிவான குரல் அழைப்பு சேவையை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையில் வழங்கவில்லை.நெட்வொர்க் பகிர்தல்
அதுமட்டும் இல்லாமல் ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஜியோ நெட்வொர்க்குடன் தங்கள் நெட்வொர்க்கை பகிர மறுக்கின்றன. இதனால் ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்களுக்கு தற்போதைய நிலைப் படி 65 சதவீதம் கால் ட்ராப் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.பிற நெட்வொர்க்குகளின் ஒத்துழைப்பு இல்லாததே ஜியோ நெட்வொர்க்கின் தாமதத்திற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.மொபைல் எண் போர்ட்டபிளிட்டி
ரிலையன்ஸ் ஜியோ சேவை அதிகாரப் பூர்வமாக துவங்கப்படும் வரை உங்கள் பழைய எண்ணை மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வாயிலாக மாற்றுவதினால் பிற நெட்வொர்க்குகளில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள இயலாது, அதிக கால் ட்ராப் அழைப்புகள் போன்றவற்றினால் மிகுந்த சிக்கல்கள் ஏற்படும்.ஜியோ முன்னோட்ட ஆஃப்ர் முடிந்த பிறகு என்ன ஆகும்?
90 நாட்கள் இலவச சேவை முடிந்த உடன் புதிய டாரிஃப் திட்டத்திற்காக நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டி வரும்.தற்போது வெளியாகி உள்ள டாரிஃப் திட்டங்களின் படி 1 எம்பி தரவிற்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.டாரிஃப் கட்டணங்கள்
குரல் அழைப்புகள் கட்டணங்கள் ஒரு விநாடிக்கு 2 பைசாவும், குறுந்தகவல்களுக்கு 1 ரூபாயும் வசூலிக்கப்படும் கூறப்படுகிறது. வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள விநாடிக்கு 5 பைசா கட்டணங்களும், ரோமிங்கில் இருக்கம் போது இன்கம்மிங் அழைப்புகளுக்கு 45 பைசாவும், அவுட்கோயிங் அழைப்புகளுக்கு 80 பைசாவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.கோரிக்கை
இந்தியாவில் பலர் இந்த ஜியோ நெட்வொர்க் சிம் கார்டுக்காக காத்திருக்கும் நிலையில் அம்பானிக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் ‘விரைவில் முழு செவையை அளிக்கவும்' இல்லை என்றால் உங்களை நம்பியும், உங்களது இலவசம் என்ற வியாபர உத்தியையும் நம்பி சிம்மை வாங்கும் வாடிக்கையளர்கள் ஆஃபர் முடிந்தவுடன் தூக்கி போட்டு விடுவார்கள் உன்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.- ------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇Share To:Ur Friends...
Post A Comment:
0 comments: