நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் பல தொலைபேசிஅழைப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது சில சமயம் முற்றிலும் தெரியாத நபர்களுகளையும் நாம் அழைக்க நேரிடும். ஒரு தெரியாத நபரிடம் நாம் நமது தனிப்பட்ட தொலைபேசிஎண்ணை வெளிப்படுத்துவது என்பது சிலசமயம் அச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அப்படியான நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் உங்கள் காலர் அடையாளத்தை மறைப்பது என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதையும் அதை எப்படி நிகழ்த்துவது என்பதை பற்றிய தொகுப்பே இது. பட்டியலிடப்பட்டுள்ளசில தந்திரங்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் 10 இலக்க எண்ணை மாற்ற முடியும் (இந்தியாவிற்குள்) ப்ரைவேட் நம்பராக மாற்றி அமைக்க முடியும்.
வழிமுறை :
அறியப்படாத ஒரு எண்ணிற்கு அல்லது நண்பர்களை முட்டாளாக்கி விளையாட உங்கள் ஸ்மார்ட்போனின் எண்ணை ஒரு ப்ரைவேட் நம்பராக மாற்ற முடியும், அதை நிகழ்த்த கீழ் வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும்.
ஆண்ட்ராய்டு 4.0 மற்றும் முந்தைய பயனர்களுக்கு :
செட்டிங்ஸ் ஆப் > கால் > அடிஷ்னல் செட்டிங்ஸ் > காலர் ஐடி > ஹைட் நம்பர் ஆப்ஷன் நிகழ்த்தவும். இப்போது நீங்கள் உங்கள் நம்பர்களின் எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள உங்கள் எண் ப்ரைவேட் நம்பர் என்று தோன்றும்.
ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் பிந்தைய பயனர்களுக்கு :
போன் ஆப் > மெனு > கால் செட்டிங்ஸ் > காலர் ஐடி > ஹேட் நம்பர் ஆப்ஷன் நிகழ்த்தவும். இப்போது உங்கள் அழைப்பு பிறருக்குஒரு ப்ரைவேட் நம்பராகவே தோன்றும்.
ஐபோன் பயனர்களுக்கு :
உங்கள் ஐபோனில் செட்டிங்ஸ் ஆப் > போன் ஐகான் கிளிக் செய்யவும் > ஷோ மை காலர் ஐடி > பின்னர் அதை ஒரு ப்ரைவேட் நம்பராக மாற்றியமைத்துவிட்டு பின்னர் 'ஆப்' ஸ்லைடருக்கு மாற்றவும்.
விண்டோஸ் பயனர்களுக்கு :
மொபைல் > மோர் பட்டன் ஆப்ஷன் > செட்டிங்ஸ் > ஷோ மை காலர் ஐடி > பின் உங்கள் தேவைக்கு ஏற்ப நோ ஒன் அல்லது மை காண்டாக்ட்ஸ் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
முக்கிய குறிப்பு :
உங்கள் எண்ணை ப்ரைவேட் நம்பராக மாற்றியமைக்க முதலில் நீங்கள் உங்கள் ஆப்ரேட்டரை தொடர்பு கொள்ள வேண்டும். ஏர்டெல், வோடபோன், மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் டயல்போர்ட் (Dialport), விஐபி மொபைல், வோடபோன் விபிஎன், வாய்ஸ் விபிஎன் போன்ற தனி சேவைகளையே கொண்டுள்ளது
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: