புதுடில்லி: சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டில்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next
Newer Post
Previous
This is the last post.
Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: