பாட்னா: பீகாரில் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியாத போலீஸ் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமாக பேசினார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. .

மதுவிலக்கை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்தீர்வு
இதை மீறி வீட்டில் மது வைத்திருந்தால் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது போன்ற கடும் தண்டனைகளை அறிவித்தார். நிதீஷ்குமாரின் நடவடிக்கைகளை அம்மாநில எதிர்கட்சிகள் விமர்ச்சித்தும் கிண்டலடித்தும் வருகின்றன.

இந்நிலையில், பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட முதல்வர் நிதீஷ்குமார் பேசியதாவது:
பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை கடைபிடிக்க நான் அறிவித்துள்ள தண்டனைகள் குறித்து எதிர்கட்சிகள் கிண்டல் அடிக்கின்றன. அவர்கள் கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு மதுவிலக்கு தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளை வழங்க வேண்டும். மதுப்புழக்கத்தை தடுப்பதற்கு மாற்று தீர்வுகளை அவர்கள் கூற வேண்டும்.

மது அருந்துவது தனிப்பட்டவர்களின் உரிமை என சிலர் கூறுகிறார்கள். நான் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் மது அருந்துவது சேர்க்கப்படவில்லை. அதனால், நான் யாருடைய அடிப்படை உரிமையையும் பறிக்கவில்லை. மதுவால் சமுதாயத்தில் ஏராளமான தீய செயல்கள் நடக்கின்றன.

வேலையை ராஜினாமா செய்யுங்கள்

கடந்த வாரம் மது ஒழிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறிய 11 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டேன். அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் பதவி உயர்வு கிடைக்காது. இதையடுத்து 200 க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தங்களை மதுவிலக்கை கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்க வேண்டாம் என எஸ்.பி.க்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர். மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியாத போலீசார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு சென்று ஒன்று செய்யாமல் உட்காருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: