ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இணையாக பயனாளிகளின் பிரியத்தை பெற்றுள்ள வாட்ஸ் அப்பில் விரைவில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம்
செய்யப்படவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் பயனாளிகளை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் வாய்ஸ்மெயில் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியை ஐஓஎஸ். மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்கள் பெறலாம். ஆனால் அதற்கு நீங்கள் வாட்ஸ் அப் செயலியை 2.16.8 அல்லது 2.16.230 வெர்ஷனை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

நீங்கள் வாட்ஸ் அப்பை மேற்கண்ட வெர்ஷனுக்கு அப்டேட் செய்த பின்னர் உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வரும். அதில் வாய்ஸ்மெயிலை எப்படி உபயோகம் செய்ய வேண்டும் என்பது விளக்கப்பட்டிருக்கும்.

முதலில் அப்டேட் செய்ய வேண்டும்: 
நீங்கள் வாட்ஸ் அப் வாய்ஸ் மெயில் ஆப்ஷனை பிரஸ் செய்தவுடன் நீங்கள் அனுப்ப வேண்டிய வாய்ஸை தேர்வு செய்து அல்லது நேரடியாக ரிகார்டு செய்ய அதற்குரிய ஐகானை பிரஸ் செய்ய வேண்டும். ரிகார்டிங்கை முடிக்கும் வரை உங்கள் விரலால் நீங்கள் அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

அப்புறம் ரிகார்ட் செய்ய வேண்டும் 
நீங்கள் பதிவு செய்ய வேண்டிய வாய்ஸ் ரிக்கார்டிங் முடிந்த பின்னர் அழுத்திக்கொண்டிருந்த உங்கள் கையை எடுத்துவிட்டு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நபரை காண்டாக்ட்டில் சென்று தேர்வு செய்து அனுப்பவும். நீங்கள் அனுப்பிய வாய்ஸ்மெயில் செல்ல வேண்டியவரிடம் சென்று முடித்தபின்னர் உங்களுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் தனி விண்டோவில் தோன்றும்.

காண்டாக்டை தேர்வு செய்யுங்கள்: 
ஒரு வாய்ஸ் மெயிலை ஒருவருக்கு மட்டுமின்றி பலருக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் இதில் வசதி உள்ளது. வாய்ஸை ரிக்கார்டிங் செய்த பின்னர் மல்டிபிள் காண்டாக்ட் ஆப்சனை செலக்ட் செய்து நீங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பவேண்டுமோ அவர்களது எண்களை தேர்வு செய்யுங்கள். அதேபோல் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ஸ்மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. இதற்கு முன்னர் ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பும் வசதி இல்லை. இந்த வசதி தற்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் மெசேஜ் அனுப்ப வேண்டுமா? 
ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டுமென்று வாட்ஸ் அப் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

வாய்ஸ் மெயில் வசதி என்பது பயனாளிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 

Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: