ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் அறிமுகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளதோடு ஸ்மார்ட்போன்தயாரிப்பு நிறுவனங்களையும் களத்தில் ஈர்த்துள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது கருவிகளில் 4ஜி எல்டிஇ நிச்சயம் வழங்கத் துவங்கியுள்ளனர். இதோடு 4ஜி அம்சம் கொண்டிருக்கும் கருவிகளின் விலையும் குறையத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் புதிய கருவியை பானாசோனிக்இணைத்துள்ளது. அந்நிறுவனம் புத்தம் புதிய பி77 (P77) எனும் புதிய கருவியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4ஜி எல்டிஇ அம்சம் கொண்டிருக்கும் இந்தக் கருவி கிரே மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் பானாசோனிக் பி77 கருவியில் 5 இன்ச் எச்டி திரை, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும்பானாசோனிக் பி77 கருவியில் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்டிருக்கும் கருவியை சக்தியூட்ட 2000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பானாசோனிக் பி77 ரூ.6,990 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: